முருகன் நம்மை வணங்குவது போல் சித்திரம் வரையப்படுகிறதே. அவர் நம்மை வணங்குவது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2012 04:03
முருகப் பெருமானுடைய உருவ அமைப்புகள் பல விதமாக சிற்ப சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றில் கை கூப்பிய நிலை கூறப்படவில்லை. இருந்தாலும் இது போன்ற சித்திரம் பிரபலமாக உள்ளது. நாம் பார்க்க நேரிடும் பொழுது நம்மை வணங்குவதாக எண்ண வேண்டாம். எங்கும் நிறைந்து இருக்கும் சிவபெருமானை வணங்கிய நிலையிலிருக்கும் முருகப் பெருமானாக எண்ணி வணங்குவோமே!