திருச்செங்கோடு வைகாசி விசாக விழா: ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2019 02:05
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்திருவிழா கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 18ல் கைலாசநாதர் ஆலயத்தில், பவுர்ணமி திதி விசாக நட்சத்திரத்தில் மங்கைபங்கன் திருத்தேருக்கு எழுந்தருளினார். இரவு ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. 19ல் ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர், அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. நேற்று (மே., 21ல்) மதியம் அர்த்தநாரீஸ் வரர் திருத்தேர் நிலை சேர்ந்தது. மாலை ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.
வரும், 23ல் அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கைலாசநாதர் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி, நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் ஆடி, ருத்ராட்ச மண்டபத்தில் மாலை மாற்றி, அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல் நடக்கிறது.