பதிவு செய்த நாள்
23
மே
2019
02:05
திருத்தணி: திரவுபதி அம்மனுக்கு, 108 மஞ்சள் குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நேற்று (மே., 22ல்) நடந்தது.திருத்தணி, பழைய திரவுபதியம்மன் கோவில் திருவிழா, 2ம் தேதி துவங்கி, 19ம் தேதி தீ மிதி திருவிழா நடந்தது.
தீ மிதி விழாவைத் தொடர்ந்து, அம்மன் உஷ்ணத்தில் உள்ளதால், அம்மனை குளிர்விக்க,
மஞ்சள் குட அபிஷேகம் நேற்று (மே., 22ல்) நடந்தது.இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, திருத்தணி, சந்து தெரு, பெரிய தெரு, வாசுதேவன் தெரு, மேட்டுத் தெரு மற்றும் எம்.கே.எஸ்.சுப்பிரமணியர் தெரு ஆகிய பகுதிகளில், 108 பெண்கள், மஞ்சள் குடங்களை தலையில் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, கோவில்
வந்தடைந்தனர். பின், காலை, 11:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு மஞ்சள் குடம் தண்ணீரை ஊற்றி, அபிஷேகம் நடத்தப்பட்டது. திருத்தணி மற்றும் அதைச்
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.