பெண்ணாடம்:சங்கடஹர சதுர்த்தியொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் வினைதீர்த்த விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் பிரளயகாலேஸ்வரர்; அழகிய காதலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள வினை தீர்த்த விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி ஆகிய பொருட்களால் அபிஷேகம்; மாலை 6:15 மணிக்கு அருகம்புல் மாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது.இதே போல், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.