சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக, நேற்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையைத் திறந்தார். நடை திறந்திருக்கும் ஆறு நாட்களிலும், தினமும் சகஸ்ரகலசாபிஷேகம், களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்), அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகியவையும் நடைபெறும். வரும் 18ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும். தொடர்ந்து பங்குனி உத்திர உற்சவங்களுக்காக, வரும் 26ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.