காரைக்குடி முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2012 10:03
காரைக்குடி :காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்தோறும் பத்து நாட்கள் நடக்கும் இவ்விழா நேற்று காலை 4.15 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. காலை 6 மணிக்கு கொடியேற்றம் முடிந்து, அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 20ம் தேதி காலை 7 மணிக்கு கோயில் கரகம், முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது. மறுநாள் காலை 9.30 மணிக்கு காவடி, பூக்குழி இறங்குதல், பால்குட உற்சவம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு முளைப்பாரி புறப்பாடும், இரவு 8.20க்கு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 22ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் அம்மன் திரு வீதி உலாவும், மறுநாள் மாலை 4 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ராமச்சந்திரன்,நிர்வாக அலுவலர் முத்துராமன், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.