பதிவு செய்த நாள்
28
மே
2019
02:05
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு, அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. திருச்செங்கோடு, வைகாசி விசாக தேரோட்ட திருவிழா, கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ல் அர்த்தநாரீஸ் வரர், செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மாலை, செங்கோட்டு வேலவர் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். மே, 19ல் ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. 23ல், நான்கு கால் மண்டபத்தில் ஊஞ்சலாடி ருத்ராச்சர மண்டபத்தில், மாலை மாற்றி பரிவார மூர்த்திகளுடன் சுவாமி திருமலைக்கு எழுந்தருளினார். நேற்று (மே., 27ல்), விடையாற்றி உற்சவம் நடந்தது. அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
பின்னர் சுவாமியை, சிவாச்சாரியார்கள் நாதஸ்வர இசையுடன் பிரகார வலம் வந்து, சிறப்பு ஆராதனை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.