பதிவு செய்த நாள்
28
மே
2019
02:05
நாமக்கல்: நாமக்கல், பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. நாமக்கல்ல், பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு திருவிழா, கடந்த, 16ல் துவங்கியது. 19ல் மறுகாப்பு கட்டுதல், 26ல் வடிசோறு மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று (மே., 27ல்) காலை, அம்மனை அலங்கரிக்கப்பட்ட தூக்குத் தேரில் வைத்து முக்கிய பகுதிகளுக்கு பக்தர்கள் தூக்கிச் சென்றனர். பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, மாவிளக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, இரவு வசந்தோற்சவம் நடக்கின்றன. நாளை (மே., 29ல்), மஞ்சள் நீர் உற்சவம், 30ல் கம்பத்தை பிடுங்கி கமலாலய குளத்தில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.