கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் சரங்குத்தும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2019 02:05
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், சரங்குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்கள் ஈட்டியை எடுத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி வளம் வந்த பின், ஆட்டின் தலை, மேலே வீசப்படுகிறது.
இந்த தலையை எந்த ஊர் இளைஞர்கள் குத்துகின்றனரோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இந்த வினோத நிகழ்ச்சி நேற்றிரவு (மே., 27ல்) நடந்தது. இதில் பிச்சம்பட்டி சேர்ந்த கந்தசாமி, 20, தனது ஈட்டியில் ஆட்டின் தலையை குத்தி வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டாரத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.