பதிவு செய்த நாள்
29
மே
2019
11:05
பழநி : கோடை விடுமுறை முடிய சிலநாட்களே உள்ளதால், பழநி முருகன் கோயிலுக்கு காவடிகள், அலகு குத்தி ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
கோடை விடுமுறை காரணமாக ஆன்மிக சுற்றுல தலமான பழநி முருகன் கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், காவடிகள், பால்குடங்கள் எடுத்துவருகின்றனர்.சிலநாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறகக உள்ளதால், பங்குனி உத்தரம், வைகாசி விசாக விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் தற்போது, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று ஏராளமான பக்தர்கள் பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துவந்து அபிஷேகம் செய்து முருகரை வழிப்பட்டனர்.பழநி பக்தர்கள் 16அடி நீளமுள்ள அலகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டஷேனில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொது தரிசனம் வழியில் 2:00 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அடிவாரம் சரவணப்பொய்கை, திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதியில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நீளமான அலகு குத்திவரும் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.