மதுரை: மதுரை புட்டுத்தோப்பு வைகை கரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் ஆடி பெருக்கை முன்னிட்டு ஜூலை 24 ஆக., 4 வரை வைகை பெருவிழா நடக்கிறது. விழா நடக்கும் புட்டுத்தோப்பு வைகை பகுதியை நேற்று பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், விழா கமிட்டி தலைவர் சுவாமி சிவானந்தா, சுவாமி சுந்தரானந்தா, சிவயோகானந்தா செயலாளர் வேதானந்தா, பாலாஜி ஆய்வு செய்தனர். விழாவையொட்டி துறவியர்கள் மாநாடு, சாக்த மாநாடு, பூஜாரிகள் மாநாடு, ஆடிப்பெருக்கு நீராடல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.