பதிவு செய்த நாள்
29
மே
2019
12:05
ஈரோடு: தளவாய்பேட்டை, எழில் அரசி மாரியம்மன் கோவில், 65ம் ஆண்டு பொங்கல் விழா இன்று நடக்கிறது. தளவாய்பேட்டை, எழில் அரசி மாரியம்மன் கோவில், 65ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த, 17ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 21ல் கம்பம் நடப்பட்டது. தினமும் காலை, மாலை வேளை, பெண் பக்தர்கள் கம்பத்துக்கு நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இன்று காலை, 10.30 மணிக்கு அம்மன் அழைத்தல், பொங்கல் விழா நடக்கிறது. மாலையில் மாவிளக்கு வைபவம் 30ல் மாலை, 4:00 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 31 மாலை, 7:00 மணிக்கு அம்மன் வீதி உலா, ஜூன், 1ல் மறுபூஜை நடக்கிறது.