சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் மழை வேண்டி வருண ஜபம் நடந்தது.சங்கராபுரம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. போதிய மழை இல்லாததால் ஏரி, குளங்கள் வறண்டன. கிணறுகளில் நீர் மட்டம் குறைந்ததால் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழை வேண்டி நேற்று (மே., 29ல்)பூட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் வருண ஜபம் மற்றும் சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. சேலம் சுந்தர்ராஜ குருக்கள் தலைமையில் வருண ஜபம் மற்றும் யாக வேள்ளி பூஜை நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி, முன்னாள் துணை தலைவர் அருணாசலம், தருமபுரி நக்சல் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமண குமார், கொளஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.