பதிவு செய்த நாள்
30
மே
2019
02:05
விழுப்புரம்: பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று (மே., 29ல்) நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த கல்யாணம்பூண்டி கிராமத்தில் பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று (மே., 29ல்)காலை 6:00 மணிக்கு, கும்ப அலங்காரம், கோ பூஜை, யாக பூஜை, சன்னாவதி ஹோமம், தத்துவார்ச்சனை நடந்தது.
தொடர்ந்து, கலசம் புறப்படாகி, காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி அம்மன் விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் கல்யாணம்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேகம் இன்று (மே., 30ல்) துவங்குகிறது.