சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் பூப்பல்லக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2019 11:05
காடுபட்டி: சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமா காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.இக்கோயிலில் மே 21 கொடியேற்றத் துடன் திருவிழா துவங்கியது. பக்தர்கள் காப்புகட்டி பால்குடம், அக்னிசட்டி எடுத்தனர். நேற்று முன்தினம் (மே.,29ல்) மாவிளக்கு வைத்தனர். முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் அருள்பாலித்தார்.