பழநி: பழநி முருகன் கோவில் முதலாம் எண், விஞ்ச் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை முதல், 45 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலுக்கு, எட்டு நிமிடங்களில், எளிதாக செல்லும் வகையில், மூன்று விஞ்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில், முதலாம் எண் வின்ச்சில், ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதனால், நாளை முதல், 45 நாட்கள் இந்த வின்ச் நிறுத்தப்படுகிறது. தண்டவாளப் பாதைகள், கம்பி வடக்கயிறு, உருளைகள் ஆய்வு செய்யப்பட்டு, தேய்மானம், சேதமடைந்துள்ள உபகரணங்கள் மாற்றும் பணி நடைபெறும். மற்ற இரண்டு விஞ்ச்கள், ரோப்கார் வழக்கம் போல இயக்கப்படும்.