சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 11-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.
வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 12-ம் தேதி அதிகாலை நடை திறந்து நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். கணபதி ஹோமம், உஷ பூஜைக்கு பின்னர் மதியம் பிரதிஷ்டை தின கலசாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து களபாபிஷேகமும், உச்சபூஜையும் நடைபெறும். மாலையில் தீபாராதனைக்கு பின்னர் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். அத்தாழ பூஜைக்கு பின்னர் இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.அடுத்து ஆனி மாத பூஜைகளுக்காக 15-ம் தேதி மாலை 5.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.