பதிவு செய்த நாள்
02
ஜூன்
2019
04:06
மோகனூர்: மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 30ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், சுவாமிக்கு, காலை, மாலை சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடக்கிறது. வரும், 5 காலை, 8:00 மணிக்கு, சுவாமி தேரில் ரதம் ஏறுதல், மாவிளக்கு பூஜை, எல்லை உடைத்தல், ஊமைப்புலி குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, 18 கிராமங்களுக்கு தேர் செல்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.