கரூர்: க.பரமத்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 12ல், காப்புகட்டுதலுடன் துங்கியது. தொடர்ந்து, ஆதிரெட்டிபாளையம், செம்மாண்டாம் பாளையம், பூலான்காளிவலசு, குப்பகவுண்டன் வலசு, காளிபாளையம் ஆகிய பகுதிகளில், அம்மன் வீதி உலா நடந்தது. பின், காவிரிஆற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, பூஜை நடந்தது. பொதுமக்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி அம்மனை வழிபட்டனர். இறுதியாக ஆற்றில் கம்பம் விடுதலுடன் விழா நிறைவடைந்தது.