பதிவு செய்த நாள்
05
ஜூன்
2019
12:06
பேரூர்:ஆலாந்துறை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில், திருக்கல்யாணம் மற்றும் அம்மன் அழைப்பு நேற்று நடந்தது.
பேரூர் அடுத்த ஆலாந்துறை ஸ்ரீகருமாரியம்மன் கோவில், 33ம் ஆண்டு, உற்சவ திருவிழா கடந்த, 28ம் தேதி, பூச்சாட்டுதல் மற்றும் தீர்த்தம் எடுத்து வருதலுடன் துவங்கியது. மறுநாள் கம்பம் நடப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று காலை, மகா தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சக்தி கரகம் மற்றும் அம்மன் அழைப்பு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்தனர். இன்று காலை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, 101 பூவோடு எடுத்தல், அலகு குத்தி வருதல் நடக்கிறது.இரவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மாவிளக்கு, முளைப்பாரி, மஞ்சள் நீராடுதல்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.