ஊட்டி:ஊட்டியில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஊட்டியில் லோயர் பஜார், மெயின் பஜார், சேரிங்கிராஸ், காந்தள், பிங்கர் போஸ்ட், மேரிஸ்ஹில் உட்பட பல்வேறு பகுதிகளில் பள்ளி வாசல்கள் உள்ளன. நேற்று (ஜூன்., 5ல்) நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையையொட்டி திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின், ஒவ்வொருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.