பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
12:06
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சந்திரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (ஜூன்., 6ல்), விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம், வெள்ளக்குளம் பகுதியில், பழமையான சந்திரேஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக, சிதிலமைடைந்து காணப்பட்ட இந்த கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கண்டுகொள்ளப்படவில்லை.
இந்நிலையில், தனிநபர் ஒருவர், அவரது சொந்த செலவில், இக்கோவில் திருப்பணியை நடத்தி முடித்துள்ளார்.இதையடுத்து, கும்பாபிஷேகத்திற்கான கணபதி ஹோமம், 4ம் தேதி துவங்கியது. நேற்று (ஜூன்., 6ல்) காலை, யாகசாலை பூஜைகள் முடிந்து, காலை, 10:00 மணிக்கு, மூலவர் விமான கலசத்திற்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.