உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கீழமாதரையில் காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கடவுள்களின் உருவத்தில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கம்பு, பாசி மற்றும் மொச்சை பயறு, தட்டாம் பயறு தானியங்களைக் கொண்டு இயற்கை முறையில் காளியம்மன், கள்ளழகர், விநாயகர், சிவன், பெருமாள், கருப்பசாமி ஆகிய கடவுள்களின் உருவங்களில் முளைப்பாரியை வடிவமைத்து ஊர்வலத்தில் எடுத்து சென்றனர். பேரையூர் ரஞ்சித், செந்தில்குமார் ஆகியோர் அவற்றை வடிவமைத்து கொடுத்தனர். பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.