பதிவு செய்த நாள்
11
ஜூன்
2019
02:06
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் வருகின்றனர். தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியோர் மலை ஏறுவதற்கு, மிகவும் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மலைக்கு ரோப் கார் வசதி செய்து தருவதுடன், சேதமடைந்த மலைப்பாதையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.