பதிவு செய்த நாள்
11
ஜூன்
2019
02:06
சென்னிமலை: சென்னிமலை அருகே, முருங்கத்தொழுவு கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமை யான, ஸ்ரீவாகை தொழுவு அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடந்து, 15 ஆண்டுகளா வதால், புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டியுள்ளது. இதையடுத்து சென்னை தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் அர்ச்சுனன், கோவிலில் நேற்று முன்தினம் (ஜூன்., 9ல்) ஆய்வு செய்தார்.
இதுகுறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உயர்மட்ட திருப்பணி கமிட்டி பரிந்துரையை தொடர்ந்து, திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடக்கும் என்று, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், உறுப்பினர்கள், அதிகாரியை வரவேற்றனர்.