பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
12:06
அவிநாசி: அவிநாசி முத்துச்செட்டிபாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணமார் சுவாமி மதுரை வீரன், கன்னிமார் கருப்பராயன் சுவாமி திருக்கோவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது.
நேற்று காலை, 7:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், அனுக்ஞை, தனபூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதில், செண்டை மேளம் முழங்க, ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து வந்தனர்.இன்று, அதிகாலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையை தொடர்ந்து, அண்ணமார், மதுரை வீரன் மற்றும் கருப்பராயன் கன்னிமார் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும், மகா கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. காலை, 10:00 மணிக்கு மேல், அன்னதானம் வழங்கப்பட உள்ளது.