பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
01:06
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தல் தையல் நாயகி அம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
நாகனேந்தல் ஸ்ரீ தையல் நாயகி அம்மன், ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்திரர் லாடசாமி, ஸ்ரீ பெரியநாயகி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 13ல்)காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக ஜூன் 12ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் முதற் கால யாகசாலை பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. நேற்று (ஜூன்., 13ல்)காலை 5:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடந்தது.
இதை தொடர்ந்து திருவெற்றியூர் சேகர் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை மங்கல இசை முழங்க கிராமத்தார்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து சென்று ஸ்ரீ தையல் நாயகி அம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.திவாகரன், ஒன்றிய செயலாளர் தன.மதிவாணன், மருந்தாளுனர் காசி, ஊரவயல் விவேகானந்தன், காளிமுத்தன், முனியாண்டி, நாகனேந்தல் தனபால், காவனூர் முத்துமன்னன், பெங்களூரு தொழில் அதிபர்கள் வேல்முருகன், தன.சரவணன், முருகன், சுரேஸ், திருமலை, தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நாகனேந்தல், காவனூர், துத்தியேந்தல், ஊரவயல் கிராம குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானேர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.