கடலூர்: கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை யொட்டி தேர்பவனி நடந்தது.
கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி 4ம் தேதியும், 16ம் தேதியும் நவநாள் ஜபம், திருப்பலி, நற்கருணை ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் (ஜூன்., 12ல்) திருப்பலியைத் தொடர்ந்து சிறப்பு தேர் பவனி நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது.