பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
01:06
புதுவண்ணாரப்பேட்டை:காளத்தீஸ்வரர் கோவில், மஹா கும்பாபிஷேகம், நேற்று (ஜூன்., 14ல்), வெகு விமரிசையாக நடந்தது.
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பழமை வாய்ந்த காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது.பக்தர்களின் முயற்சியில், கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியுடையம்மன், பிரத்யாங்கரா தேவி, வீரபத்திரர், லிங்கோத்பவர் ஆகிய சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்து, நேற்று (ஜூன்., 14ல்), காலை, 10:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
அதன் முன்பாக, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும்; 8:30 மணிக்கு, தீபாராதனையும்; 9:00 மணிக்கு, யாத்ரா தானமும், 9:45 மணிக்கு விமானக் கும்பாபிஷேகமும் நடந்தது.
இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். இதை யொட்டி, 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்குத் திருக்கல்யாணம்; இரவு, 8:30 மணிக்கு, சிறப்பு நாதஸ்வரக் கச்சேரியுடன், சுவாமி வீதியுலா நடந்தது.