பாகூர்: கிருமாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டுதீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருமாம்பாக்கம் திரவு பதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று (ஜூன்., 14ல்) நடந்தது. காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 12.30 மணிக்கு அரவாண் களபலியும், 1.00 மணிக்கு படுகளம், அம்மன் சபதம் முடித்து கூந்தல் முடிதல் நிகழ்வுகள் நடந்தது.இதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில், அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.