திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் 40 ஆண்டுகளுக்கு பின் நேற்று (ஜூன்., 14ல்) நடந்தது.
கொளுஞ்சிபட்டி கிராமத்தினர் அய்யனார் கோயிலில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்தனர். ஜூன் 12ல் இதற்கான பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று (ஜூன்., 14ல்) காலை 7:00 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது.
லட்சுமி, கஜ, கோ பூஜைகளுக்கு பின் நேற்று (ஜூன்., 14ல்) காலை 10:45 மணிக்கு சிவாச்சாரி யார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இக்கோயிலில் 40 ஆண்டுக்கு பின் நடந்த கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பல்வேறு, தரிசனம் செய்தனர். கிராமத்தினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.