Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க காகை வாகனத்தில் சனீஸ்வர பகவான் ... பக்தர்களுக்கு அருளும் ஆஞ்ஜநேயருக்கு பஞ்சவடீயில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு அருளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர். எஸ். மங்கலத்தில் அரசாளவந்த அம்மன் கோயில் ராஜ கோபுர கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆர். எஸ். மங்கலத்தில் அரசாளவந்த அம்மன் கோயில் ராஜ கோபுர கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
02:06

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் ராஜ கோபுர கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள அரசாளவந்த அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.இந்த கோயில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டு ராஜ கோபுரத்திற்கு நேற்று
(ஜூன்., 14ல்) காலை 10:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஜூன் 11ல் எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜையுடன், முதற்கால யாகசாலை பூஜைகளும், ஜூன் 12ல் விக்னேஸ்வர, பிரம்மச்சாரி பூஜையுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், ஜூன் 13ல் சுமங்கலி, கன்னியா பூஜைகளுடன், நான்காம் மற்றும் ஐந்தாம் கால
யாகசாலை பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.

விழாவின் தொடர்ச்சியாக நேற்று (ஜூன்., 14ல்) காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடைபெற்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கோயில் அர்ச்சகர் விஜயராகவ பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விழா குழுவினர் முன்னிலையில் மங்கல இசை முழங்க
ராஜ கோபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பின்பு காலை 10:16 மணிக்கு கோயில் ராஜ கோபுரத்தை கருட பகவான் சுற்றி வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தததை தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு அரசாளவந்த அம்மன் கோயில் ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மூலஸ்தான கோபுரத்திற்கும் கும்ப நீர் ஊற்றப்பட்டது. பின் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ஸ்தபதிகள் அழியாதான் மொழி நரசிங்கம், பாரனூர் தெய்வேந்திரன், ஆர்.எஸ். மங்கலம் கோட்டையா பிள்ளை சிவகாமி அம்மாள் குடும்பத்தார்கள் ஆடிட்டர் விஜயபாண்டி, கணேஷ் மளிகை சேகர், சேகர் பேன்ஸி ஸ்டோர் மாரிமுத்து, ஈஸ்வரி மெட்டல்ஸ் முருகானந்தம், கோபிகிருஷ்ணன், கோகுல அரசு, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் (ஓய்வு) மணிமாறன், பத்திர எழுத்தர் கந்தசாமி, ஓம்சக்தி செட்டியார் நகைக்கடை இளங்கோவன், கணக்கர் பூபதி, சதுரகிரி சாமியானா டெக்கரேசன் பாண்டித்துரைஉட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பின்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar