திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும், வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளன்று மாலை, மலையப்ப ஸ்வாமிக்கு, மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
திருமலை, ஏழுமலையான் உற்சவமூர்த்தியான, மலையப்பஸ்வாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் களையப்பட்டு, அவருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான நேற்று காலை, யாகம் வளர்த்து, அர்ச்சகர்கள், உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வைத்தனர். பின், செப்பணிடப்பட்ட தங்க கவசத்திற்கு பூஜைகள் செய்து, சுத்தி செய்து, மகாபூர்ணாஹுதி நடத்தப்பட்டது. பின், உற்சவமூர்த்திகளுக்கு மீண்டும் தங்க கவசங்கள் அணிவிக்கப்பட்டது. பின், புதிய தங்க கவசத்தில், ஊஞ்சல்சேவை கண்டருளிய உற்சவமூர்த்திகள், மாடவீதியில் வலம் வந்தனர்.