நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 17 ம் தேதி கொடியேற்றப்பட்டது. கடந்த 9 ம் தேதி முதல் திருவிழா துவங்கி சுவாமி வீதி உலா நடந்தது.10ம் தேதி அர்ச்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.கடந்த14ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 8:20 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.விழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.நேற்று முன்தினம் 15ம் தேதி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு சுவாமிக்குசிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து இரவு சுவாமி வீதி உலா நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.