பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
02:06
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று (ஜூன்., 16ல்) காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
காலை 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் பன்னீர் போன்ற நறுமண பொருட் களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் மயிலம் அக்னி குளக்கரையில் உள்ள விநாயகர் கோவலிலில் இருந்து கிரிவலத்தை துவக்கி சன்னதி வீதி வழியாக மலைக் கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கிரிவல பக்தர்களின் சார்பில் சிறப்பு பாலாபிஷேகம், வழிபாடு நடந்தது.
இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது.விழா ஏற்பாடுகதளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி கள் செய்தார். இது போன்று நெடிமோழியனூர், கொல்லியங்குணம் காளியம்மன் கோவில், தென்பசியார் பெரியபாளையத்தம்மன் ஆகிய கோவில்களில் பவுர் ணமி வழிபாடு நடந்தது.