பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
02:06
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி- வைரக்கவுண்டன்புதூர் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 13ல் காலை, 6:00 மணிக்கு மஹா கணபதி, லட்சுமி, நவக்கிர ஹோமங்கள், பிரவேச பலி ஆகியவை நடந்தன.
இரவு, 7:00 மணிக்கு, முதல்கால யாக பூஜை, தீபராதனை, இதையடுத்து யந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தனம் சாற்றுதல் ஆகியவை நடந்தது. இரண்டாம் நாள், அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7:30 மணிக்கு, 2ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடம்ப புறப்பாடு, யாத்ரா தானம் ஆகியவை நடந்தது. காலை, 9:30 மணிக்கு மஹா கும்பாபி ஷேகம் நடந்தது.
இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தர்மபுரி, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.