உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி காலை 8.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின்னர் 13ம் தேதி மாலை 5.30 மணியளவில் பகாசுரனுக்கு அன்னமிடுதலும், 14ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், அன்னதானமும், இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தது.. 15ம் தேதி முதல் இரவு சுவாமி வீதி உலா நடந்தது. இன்று காலை 9 மணியளவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். நாளை மாலை 5.30 மணியளவில் தீ மிதி விழா நடக்கிறது. 22ம் தேதி மாலை மஞ்சள் நீர் உற்சவம், 23ம் தேதி காலை 6 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமசாமி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.