மதுரையில் வைகை பெருவிழா துறவியர்கள் சங்கம் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2019 01:06
மதுரை: மதுரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா 2019 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை புட்டுத்தோப்பு வைகை கரையில் நடக்கிறது. வைகை நதியின் புனிதம் காக்கும் பொருட்டு வைகை பெருவிழா ஜூலை 24 ல் துவங்குகிறது. ஜூலை 25 துறவியர் மாநாடு 26ம் தேதி பெண்கள் மாநாடு 27ல் திருமால் அடியார்களின் சங்கமம் 28ல் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாடு 29ல் பூஜாரிகள் பேரமைப்பு மாநாடு 30ல் சிவனடியார்கள் மாநாடு 31 பாரதிய பசுவின பாதுகாப்பு மாநாடு ஆக.1 முத்தமிழ் மாநாடு மற்றும் இளைஞர் மாநாடு 2 ம் தேதி நதிநீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மாநாடு 3 ம் தேதி சன்மார்க்க மாநாடு மற்றும் சித்தர்கள் மாநாடு ஆடிப்பெருக்கு வைகையில் நீராடல் நிகழ்ச்சி ஆக.4 அனைத்து சமய சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் நிறைவு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை சங்க தலைவர் சுவாமி ராமானந்தா செயலர் சுவாமி வேதாந்த ஆனந்தா சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா துணை தலைவர்கள் ஸ்ரீநிவாசன் பாலாஜி பொருளாளர் ராஜன் செய்து வருகின்றனர்.