பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
விழுப்புரம்:விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர்., நகர் அபிநவ மந்த்ராலயா ராகவேந்திரர் சுவாமி கோவிலில் நாளை 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று 26ம் தேதி காலை 6:30 மணிக்கு புண்யாவாசனம், 7:30 மணிக்கு ரித் விக்வர்ணம், 8:00 மணி முதல் 12:00 மணி வரை கலச ஸ்தாபனம் மற்றும் மாலை 6:00 மணிக்கு வேத பாராயணம், இரவு 8:00 மணிக்கு ஸ்வஸ்தி வாசனம், மகா மங்களாரத்தி நடக்கிறது. தொடர்ந்து, நாளை 27ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பவமான ஹோமம், தன்வந்திரி ஹோமமம் நடக்கிறது.
இதையடுத்து, 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் ராகவேந்திரர் சுவாமிகள், வலம்புரி விநாயகர், மகா விஷ்ணு, தட்சணாமூர்த்தி, நீலகண்ட விநாயகர், நவக்கிரகங்கள், நாஹர் மாஞ்சாலம்மன், வித்யா சரஸ்வதி, சீதாராம லோகசேம வீரஆஞ்சநேயர், ஆவுடையார் லிங்கம் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. மந்த்ராலய ராகவேந்திரர் சுவாமி மட பீடாதிபதி சுபுதீந்திர தீர்த்தர் கும்பாபிஷேக நீர் ஊற்றுகிறார்.ஏற்பாடுகளை ராகவேந்திரர் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக கமிட்டியினர், திருப்பணிக் குழுவினர், ராகவேந்திரர் சுவாமிகள் அறக்கட்டளையினர், மகளிரணி மற்றும் ராகவேந்திர ஸ்வாமிகள் பக்த சேவா இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.