மஹாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததின் நோக்கம் யாது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 04:03
பத்துடன் நிறுத்திக் கொள்வதாக அவர் கூறவில்லை. எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு இடையூறு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்வேன் என்று அருளியிருக்கிறார். பூமியைத் தாங்கிக் கொள்ள ஆமையாக அவதாரம் எடுத்தார். இரணியன் இறைவனிடம் வரம் கேட்ட பொழுது மனிதன், மிருகம், தெய்வம் யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்று வேண்டியிருந்தான். இதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் பகவான் மனித உடலும் சிங்க முகமுமாக நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். இதுபோல சூழ்நிலைக்குத் தக்கவாறு அவதாரம் எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.