பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
02:06
கோவை: ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் வரும் ஜூன் 30ம் தேதி சமஷ்டி உபநயனம் இலவசமாக நடக்கவுள்ளது.
காலை, 9:45 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் சிம்ம (ஸிஹ்ம) லக்னத்தில் சமஷ்டி உபநயன பிரம்மோபதேச முகூர்த்தம் நடத்த, சத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யார் சுவாமிகள் அனுக்கிரகத்துடன், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.27வது ஆண்டு பூஜா சங்க சமஷ்டி உபநயனம், காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. காலை, 6:30 மணிக்கு, உதகசாந்தி பூர்வாங்கம், 9:45 மணிக்கு, உபநயன சுபமூகூர்த்தமும் நடக்கிறது. தொடர்ந்து, பிரம்மோபதேசம், காலை, 10:30 மணிக்கும், மகாசீர்வாதம், காலை, 11:00 மணிக்கும் நடக்கிறது.உபநயனம் செய்ய விரும்பும் பெற்றோர்கள், ஸ்ரீ பூஜா சங்கத்தை அணுகலாம்; 0422 - 223 6059 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.