பதிவு செய்த நாள்
29
ஜூன்
2019
02:06
திருவாலங்காடு : வேதநாயகி சமேத வேதீஸ்வரர் சுவாமி கோவிலின் மஹா கும்பாபிஷேகம், அடுத்த மாதம், 4ம் தேதி நடைபெறுகிறது.திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் கிராமத்தில், வேதநாயகி உடனுறை வேதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து, அடுத்த மாதம், 4ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.இதற்காக, கோவில் வளாகத்தில், யாகசாலை அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அடுத்த மாதம், 2ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.
வரும், 4ம் தேதி காலை, 9:30 மணிக்கு, கலச ஊர்வலம் மற்றும் கோபுரம், விநாயகர், முருகர், வேதநாயகி, வேதீஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறு கிறது. காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.