பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
02:07
திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு, தெப்ப உற்சவ விழா நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம், இன்று (ஜூலை 2ல்) மாலை, ஹிருதபநாசினி குளத்தில் நடக்கிறது.இதற்காக, உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன், இன்று (ஜூலை 2ல்) , நீராழி மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தினமும் மாலை, குளத்தில் மூன்று முறை அலங்கரிக் கப்பட்ட தெப்பத்தில் வலம் வருவார்.திரளான பக்தர்கள் தெப்ப உற்சவத்தில் பங்கேற்று, பெருமாளை வழிபடுவர். மேலும், இன்று (ஜூலை 2ல்) முதல், மூன்று நாட்களுக்கு, மூலவர், உற்சவர் தாயார் முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வெல்வெட்டு அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.