கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2019 02:07
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆனிமாத அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு பிரதி அமாவாசை தினத்தில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) இரவு பத்ர காளியம்மன், பெரியநாயகி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தினர். பெண் பக்தர்கள் குங்குமார்ச்சனை செய்தனர்.கோவிலில் நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.