விழுப்புரம் கிருபானந்த வாரியார் பேரவை குளத்தை சீரமைக்க தீர்மானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2019 02:07
விழுப்புரம்: மேல்வாலை ஒடுவன்குப்பம் எல்லையில் உள்ள, நீர்பிடிப்பு குளத்தை சீரமைக்க திருமுருக கிருபானந்த வாரியார் இலக்கிய பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் திருமுருக கிருபானந்த வாரியார் இலக்கிய பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பேரவை செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.பொருளாளர் மேகநாதன், துணைச் செயலர் இளம்பரிதி, ஓய்வுபெற்ற சுகாதார மேற்பார்வை யாளர் ஜெயராமன், டாக்டர் மூர்த்தி ஆகியோர் சிறப்புரையற்றினர்.
இதில், திருமுருக கிருபானந்த வாரியார் இலக்கிய பேரவை மற்றும் கண்டாச்சி புரம் பழநி வேலு கல்விக்குழுமம் இணைந்து, மேல்வாலை ஒடுவன்குப்பம் எல்லையில் உள்ள நீர்பிடிப்பு குளத்தை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றினர். இதை தொடர்ந்து, கிராம ஊராட்சி செயலர் ரமேஷிடம் அனுமதி கேட்டுள்ளனர். சில தினங்களில் நீர்பிடிப்பு குளத்தை சீரமைத்து, அழகுப்படும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.