பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
02:07
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, ராமகுப்பம் கிராமத்தில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோவிலில், வரும், 11ம் தேதி, 28ம் ஆண்டு, ஹரே ராம பஜனை நிகழ்ச்சி துவங்குகிறது.
மறுநாள், விடியற்காலை, 4:00 மணிக்கு, ஆண்டாள் திருப்பாவை, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம், 5:30 மணிக்கு கலச பூஜை மற்றும் அகண்ட தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, அனைத்து பஜனைக் குழுக்களும் பங்கேற்கும் பஜனை நிகழ்ச்சி துவங்கு கிறது. இரவு, 8:00 மணிக்கு நகர சங்கீர்த்தனையும், மறுநாள் காலை, 6:30 மணிக்கு, பூர்ணாஹூதி கலச அவப்ருத ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறும்.இதில், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்பர்.