பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
03:07
அன்னூர்:பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 11ல் நடக்கிறது.பிள்ளையப்பம்பாளையத்தில், 1,416ம் ஆண்டு செல்வநாயகியம்மன் எழுந்தருளினார். இதற்கு சான்றாக, 20 ஓலைச்சுவடிகள் உள்ளன. கடந்த, 1904ல் முழு கற் கோவிலாக உருவானது. 1985, 1994 மற்றும், 2007ல் பல திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது, கருவறை முன் மண்டபத்தில் செப்பு தகடுகள் பொருத்தப் பட்டுள்ளன. கும்பாபி ஷேக விழா, வரும், 7ல் விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. மாலையில் நிலதேவர் வழிபாடு நடக்கிறது. 8ல் திருக்குடங்கள் உலா, மாலையில் முதற்கால வேள்வி நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, இரண்டாம் கால வேள்வி, மாலையில் மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. 10ம் தேதி காலை நான்காம் கால வேள்வி, விமான கலசங்கள் வைத்தல், மாலையில் எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.
வரும், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு, விநாயகர், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக் கும், 10:30 மணிக்கு செல்வநாயகியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் அம்மன் வீதியுலா நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை காடை குல மக்கள் செய்து வருகின்றனர்.