பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
03:07
கோவை:கடவுளின் பெயரை மனமுவந்து அழைத்தால் குலத்துக்கே பயன் கிடைக்கும் என, ஆன்மிகச் சொற்பொழிவில் கூறப்பட்டது.
பாரதீய வித்யா பவன் கோவை கிளை சார்பில், க்ருஷ்ண கதாம்ருதம் எனும் தலைப்பில், ஹரிகதை ஆன்மிகச் சொற்பொழிவு, பவன் வளாகத்தில் நேற்று (ஜூலை., 4ல்) துவங்கியது. சொற்பொழிவாளர் ஆராவமுதாச்சாரியார் பேசுகையில்,இறைவனின் திருநாமங்களை சொல்வதன் மூலமும், கேட்பதன் மூலமும் நமக்கு பயன் கிடைக்கும்.
இறைவனின் பல்வேறு அவதாரங்களை பற்றி கூறுவதே ஹரிகதை. வேதத்தின் வேறு பெயர் ஸ்ருதி. தெய்வீக வரலாறுகளை எடுத்துக்கூறும் இதிகாசங்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம். தந்தையால் தனயனுக்கும், தனயனால், தந்தைக்கும் பெருமை ஏற்பட வேண்டும். யார் ஒருவர் கடவுளின் பெயரை மனமுவந்து அழைக்கின்றாரோ, அவருக்கு மட்டுமின்றி, அவரது குலத்துக்கும் அவன் அருள்வான், என்றார்.சாருலதா வயலின், கோபால கிருஷ்ணன் மிருதங்கம் வாசித்தனர். வரும், 7 ம் தேதி வரை சொற்பொழிவு நடக்கிறது.