கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் இன்று (ஜூலை., 8ல்) ஆனி திருமஞ் சனத்தை ஒட்டி, காலை 10.00 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. பிற்பகல் 2.00 மணிக்கு நடராஜருக்கு, பால், பன்னீர், எலுமிச்சை, தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப் படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.