திருவாடானை அருகே ஆற்றில் கிடைத்த கோயில் கல்தூண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2019 02:07
திருவாடானை: திருவாடானை அருகே ஆற்றில்கோயில் கல்தூண்கள் கண்டெடுக்கபட்டது. திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் இருந்து ஆதியூருக்கு செல்லும் ஆறு தூர்வாரும் பணிகள் நடக்கிறது. சூச்சனி கண்மாய்கரை ஓரத்தில் பணிகள் நடந்த போது கோயில் கல் தூண்கள் மண்ணில் புதைந்தபடி இருந்தன. மணல் அள்ளும் இயந்திரம் மூலம் புதைந்திருந்த 8 கல் தூண்கள் எடுக்கப்பட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கலை நயமிக்க தூண்கள் உள்ளன. பண்டைய காலத்தில் தூண்களை வடிவமைத்த போது மீதமுள்ள தூண்களை அங்கு போட்டிருக்கலாம், என்றனர்.